Tuesday, 16 January 2018

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பொன்மொழி 3

ஓடும் பேருந்தில் ஏறாதே ,இறங்காதே ! 108 இல் ஏத்திடுவாங்க மறக்காதே !  உரியவயதில் உரிமம் வாங்கி வாகனம்  ஓட்டுவோம் ! விலைமதிப்பில்லா உயிரை காப்போம் ! வழிகொடுப்போம் ! அவசரஊர்தி ,தீயணைப்பு வாகனங்களுக்கு ! உயிர்காப்போம் !  இருசக்கர வாகனத்தில் இருவராக சென்று பாயனத்தை இன்ப பயணமாக்குவோம்...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பொன்மொழி 2

      இன்பசுற்றுலா இனிதாக முடிய     அணிவோம் சீட் பெல்ட் !       முறையான வாகன பராமரிப்பு    ஓட்டுனரின் உயிர்காப்பு !     நெடுஞசாலையில் நுழையுது உங்கள் வாகனம்  நிச்சயம் வேண்டும் தனிக்கவனம் !   தூக்கம்  வந்துட்டா  வாகனத்தை ஓரம்கட்டு ! விபத்து நடந்திட்ட நூத்தியெட்டு !    உன் வாகனத்தில் பெரும்பரம் ஏற்றாதே ! விபத்து நடந்தால் உயிரை போய்விடும் மறக்காதே !     இன்று  போதையில் ஓட்டுனரா ? நாளை கண்ணீர் அஞ்சலி போஸ்டரா ?   சாலையில் பழுதான வாகனம் ! அவசியம் சிகப்பு முக்கோணம் !  ...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பொன்மொழி 1

வேண்டும் பெற்றோருக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு! அதுவே பிள்ளைகளின் நல்வாழ்வு ! சாலையில் அவசரம் என்ன அவசரமோ ? தவறினால் உயிரும் திரும்ப வருமோ ? உரியவயதில் எட்டுபோட்டு உரிமம்வாங்கி உயிர்காக்க தலைக்கவசம் அணிவோம் ! சர்க்கஸ் சாகசம் சாலையில் வேண்டாம் ! சாகாவரம் வாங்கல யாரும் ! சாலை குறியீடுகளை மறைத்து வாகனங்களை நிறுத்தாதே ! விபத்து நடக்கலாம் மறக்காதே ! ஓய்வின்றி வாகனம் ஓட்டாதீர் ! நிரந்தர ஒய்வு அடையாதீர்! இரவில் வாகனத்தில் வெளிச்சத்தை தாழ்த்துவீர்...